திங்கள், 26 ஏப்ரல், 2010


இளமைக் குரலை அறிந்துவிட்டேன்.
இன்பக் கடலில் மூழ்கிவிட்டேன்.
உன்னைக் கண்டா - குயிலும்
கூவப் பழகியது...!
உன்னைக் கண்டா - கிளியும்
பேசப் பழகியது...!
இளமை இனிமை இரண்டும்
என்னைத் தனிமை ஆக்கியது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!

அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன்.
உன்னை எண்ணி அன்னையை
அணைத்துவிட்டேன்.
உன்னைக் கண்டா - மயிலும்
ஆடப் பழகியது.
உன்னைக் கண்டா - அன்னம்
நடை பழகியது.
அழகும் அறிவும் இணைந்து
என்னை அமைதி ஆக்கியது.

தேவதையை நேரடிப் பார்வையில்
பார்த்து விட்டேன். - அவள்
காலடியில் தரிசனம் ஆகிவிட்டேன்.
உன்னைக் கண்டா - கோயில்ச்சிலைகள்
செதுக்கப் பழகியது.
உன்னைக் கண்டா - புடவைகள்
நெய்யப் பழகியது. - நீ.......
தேவதையா......? தெய்வச்சிலையா......?
என்னைச் சிந்தனையில் மூழ்கவைத்தது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

வீசியது கடும் புயற்காற்று....!


தமிழீழத்தில் ஓர் தென்றல்
திசை மாறி வீசியது.....
அது நீ பிறந்த போது...!
தமிழீழத்தில் மற்றுமோர் தென்றல்
திசை தெரிந்து வீசியது.....
அது நீ தவண்ட போது...!

தமிழீழத்தில் சில்லென
வீசியது காற்று.....
அது நீ படிக்கும் போது...!
தமிழீழத்தில் மெல்லப்
படந்தது பருவக்காற்று.....
அது நீ பருவமடைந்த போது...!

தமிழீழத்தில் ஆங்காங்கே
வருடியது வாடைக்காற்று.....
அது நீ சாதனை புரிந்த போது...!
தமிழீழத்தில் திசை தெரியாது
வீசியது கடும் புயற்காற்று.....
அது நீ செல்லடித்து சாகும் போது...!

புயற்காற்றே நீ.......... எப்போது
தென்றலாய் மாறுவாய்.............?
தென்றலே நீ............ எப்போது
எம் தேசத்தை தாளாட்டுவாய்....?
தேசமே நீ............. எப்போது
எம் தமிழினத்தை சீராட்டுவாய்...?
பாராட்டுவாய்....? தாளாட்டுவாய்...?

வியாழன், 22 ஏப்ரல், 2010

உன் அன்பு எனக்கு மட்டும்தான்.......


வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள் எல்லாம்
வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..
காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...

சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில் வாழ
வைக்க போராடுபவனே உன் அன்பினில்
என் தாயை காண்கிறேன்..
உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்..
என்னோடு சண்டை பிடிக்கும் போது உன்னை
குழந்தையாய் காண்கிறேன்..
இப்படி காணும்யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்
அனுபவிக்க விட நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல..

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நேற்று நிகழ்ந்தது.


“வந்து போனவன்

கட்டிச் சென்ற கோட்டையின் அருகாய்

பல்லாயிரம் பேர்கள் உயிரிழந்தார்கள்”

தயவு செய்து புள்ளி விபரங்களில்

உயிர்களை எண்ணாதீர்கள்.

அந்த இளைஞர்களின் சடலங்களை நீங்களெவரும்

கண்டதேயில்லை.

ஆறாய் ஓடிய குருதியைத் தானும்

அறிந்திருக்க மாட்டீர்கள்.

வெடிகளில் சிக்கி

அலறியபடியே இறந்த அவர்களிடம்

என்னதைப் போலவே கனவுகள் இருந்திருக்கும்.

முள்ளிவாய்க்கால்

காற்றுக்கு மட்டும் தெரிந்த அந்தக் கனவுகளை விவரிக்க

என்னிடமும் தான் வார்த்தைகள் இல்லை.

நாட்டை விட்டோடிய

லட்சம் பேரை விடவும் அவர்களிடமோ

நம்பிக்கை இருந்தது.

நாளைக்குச் சந்தியிலே சிலையெழுப்பி

அவர்களை “நினைவுகூர”

யாரும் முயலக்கூடும்.

வேண்டாம் பலவந்தமாக

அவர்களை யாரும் நினைவுறுத்த வேண்டாம்.

எனது தேசத்தின் மனிதர்கள்

என்று நான் அவர்களை

ஒவ்வோர் போதும் நினைவு கூர்வேன்

என்னைப் போலவே எனது தேச மக்களும்.

-இளவாலை விஜயேந்திரம்-