வெள்ளி, 26 நவம்பர், 2010

களத்தில் இருந்து போராளி தகவல்


நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம் - களத்தில் இருந்து போராளி தகவல்
உலகத் தமிழினத்தின் தலைநிமிர்விற்கு இன்று அகவை 56. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 56வது பிறந்த நாள் அன்று களத்தில் இருந்து இனிப்பான நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே௧9ம் திகதிக்கு பின்னர் எல்லாமே முடிந்துவிட்டதாக எதிரிகள் கதையளக்க அதை நம்பி துரோகிகள் கூக்குரல் இட்டு ஆரவாரம் செய்ய ஒவ்வொரு நிமிடங்களும் உலகத் தமிழர்களிற்கு ஒவ்வொரு யுகங்களாக கடந்து வருகையில் அவ்வப்போது நம்பிக்கையான தகவல்கள் பலவழிகளில் கிடைத்த வண்ணமுள்ளது. அந்தவகையில் வன்னி களமுனையில் இருந்து நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது. அதனை இந்த தலைவனது பிறந்தநாளில் உலகத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.

மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் உழவுஇயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவரை இடைமறித்த களத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போராளிகள் குழு ஒன்று இந்த நம்பிக்கையான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் அழிந்து போய்விடவில்லை. உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கின்றோம். உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டுதான் உள்ளோம். அடுத்கட்ட பாய்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கின்றோம். தயவுசெய்து புலம்பெயர்ந்து இருக்கும் எமது உறவுகளிடம் சொல்லுங்கள்...

எதிரியாலும் துரோகிகளாலும் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் நம்பவேண்டாம். நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்றும் அண்ணை(தலைவர்)வெளியில் வந்து தமிழீழத்தை மீட்பது விரைவில் நடக்கத்தான் போகின்றது. அதற்கு ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக புலம்பெயர்வாழ் உறவுகள் களமாடவேண்டியது அவசியமாகும். என்ற தகவலை சொல்லிவிட்டு களநிலவரம் தொடர்பாக சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுவிட்டு கடந்து சென்றுள்ளனர் இன்னும் உயிர்ப்புடன் களப்பணியில் தம்மை அர்பணித்துக் கொண்டிருக்கும் தேசத்தின் புயல்கள்.

அன்புத் தமிழ் உறவுகளே! தமிழீழம் என்பது குறிப்பிட்ட சிலரது விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ அல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் வேண்டிய அவசியமான நிலையாகும். ஆகவே குறிப்பிட்ட சிலரோ அல்லது குறிப்பிட்ட சில குழுவினரோ ஒட்டுமொத்த சுமையையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான பணியை தொடர்ந்து செய்ய முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் அன்நிய ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் எமது தாபயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

தலைவரது இருப்புத் தொடர்பாகவும் களமுணையில் மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா...? என்ற விவாதங்களில் இனியும் காலத்தை விரையமாக்காது விரைந்து பணியாற்றுவோம். அனைத்துலக மன்றங்களில் எமது கோரிக்கையை வலுவாக முன்வைத்து தலைவரது வரவிற்கும் அத்தோடு இணைந்த தமிழீழ மலர்விற்கும் விரைந்து வழியேற்படுத்துவோம்.

தமிழீழ விடுதலையை தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு கடலிலும் தரையிலும் வானிலும் கரைந்து போய் காவியமான எமது மானமறவர்களான மாவீரர்களை போற்றிபுகழ்ந்து நிணைவெழுச்சி கொள்ளும் இந்த புணிதநாட்களில் அந்த மாவீரர்களது புணித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் எமது பாசத்திற்குரிய பல்லாயிரக்கணக்கான உறவுகளை கொன்று குவித்ததோடு விழுப்புண்னடைந்து களத்தில் இருந்த பல்லாயிரம் போராளிகளையும் அனைத்துலக போர்விதிகளை மீறி கொன்று குவித்து கொலைவெறியாட்டம் நிகழ்த்திய சிங்களத்திற்கும் அதற்கு துணைநின்ற நாடுகளிற்கும் தமது பிராந்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நிகழ்ந்தேறிய கொடுமைகளை வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்தத உலக வல்லரசுகளிற்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி சுதந்திர தமிழீழத்தை தலைவர் அமைப்பது சர்வ நிட்சயம்.

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்...? உலகத் தமிழர்களே சிந்தியுங்கள். துணிவுடன் முடிவெடுங்கள். இறுதி இலக்கான தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை ஓயமாட்டோம் என்று தமிழீழக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப்பேழைகளாகிய முப்பத்தேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது கல்லறைமீது வீர சபதமெடுத்து களமாட இன்றே புறப்படுங்கள்.

நாளை நமதே. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

வியாழன், 18 நவம்பர், 2010

2 முதலைகளை விரட்டிய அதிசயப் பூனை


நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான பூனைகள் பொதுவாக சாந்தமானவை.

அவை எலிகளைப் பிடிப்பதும், நாய்களுக்கு அஞ்சுவதும் நாம் தினசரி காணும் காட்சிகள்.

ஆனால் பூனைகள் உண்மையாக அவ்வாறில்லை. சிலவேலைகளில் தம்மை எதிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மூர்க்கமாக மாறுவதுமுண்டு.

அத்தகைய சம்பவமொன்று அமெரிக்க லூசியானாவிலுள்ள பண்ணையொன்றில் இடம்பெற்றுள்ளது.

அக்காட்சியை நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

சனி, 13 நவம்பர், 2010

இதுதான் வாழ்க்கை ....


வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே
வாழ்ந்து தான் பார்ப்போமே
வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே

செல்லும் பாதை இங்கே பார்த்தால்
கல்லும் முள்ளும் கரடும் முரடும்
கண்கள் திறந்தே நாமும் வைத்தால்
காலம் முழுதும் மகிழ்வோமே

உள்ளம் முழுதும் உண்மை வைத்தால்
உன்னை வெல்ல உலகில் எவருமில்லை
வெள்ளம் போலே இன்பம் பொங்கும்
வேறு வாழ்வில் ஏதுமில்லையே

சொல்லச்சொல்ல நீயும் திருந்து
சோகம் தீரும் உன்னைக் களைந்து
சொந்தபந்தம் எல்லாம் உணர்ந்து
சொர்க்கமாகும் வாழ்க்கை விருந்து

வியாழன், 11 நவம்பர், 2010

ஒருவருட காதல


வருடப்பிறப்பு அன்று கோயிலில்
திருவிழாக் கால மக்கள் திரளுள்
கருவிழியாள் உன் பார்வையால்
அரும்பியது என்னுள் காதல்

தைப்பொங்கல் வரும்வரையில்
தையலுன் பின்னால் தினமும்
அலைந்த என் காதலுள்
தொலைத்தாய் உன் இதயத்தை

மாசி வந்ததும் நாமிருவரும்
பேசி பேசி காதல் செய்தோம்
பங்குனி மாதத்தில் உன்
சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்

சித்திரை மாதம் வந்ததும்
நித்திரையின்றி புரண்டேன்
வைகாசி பூத்ததும் நாமிருவரும்
கைராசி பார்த்து சந்தோசப்பட்டு

ஆனி வந்ததும் உல்லாசமாக
தேனீக்கள்போல பறந்து திரிந்து
ஆடி வந்ததும் இருவரும்
பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்

ஆவணி உதித்ததும் உனக்கு நான்
தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்
புரட்டாதியும் வந்தது நமக்குள்
புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்

ஐப்பசி வெகுவிரைவில் வந்தது
பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு
கார்த்திகை பூக்க தொடங்கையில்
பூர்த்தியானது நம் தொடர்பு

மார்கழி முடியும் வேளையில் எனக்கு
மூர்க்கம் வந்தது காதல் மேல்..
சந்தோசமாக மலர்ந்த காதல்
சந்தேகத்தால் உதிர்ந்தது.

மீண்டும் வருடம் பிறந்தது
கண்டேன் பல பெண்களை ஆனாலும்
வேண்டாம் எனக்குள்
இன்னொரு காதல்....

செவ்வாய், 2 நவம்பர், 2010

யாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை


யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.

கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் சாதாரணமாகவே இக்குலை காணப்பட்டது. ஆனால் பின்னர் குலையின் அளவு நீண்டு வ்ரத் தொடங்கியது.

எனினும் விவசாயி யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களும் இவ்வதிசயத்தை மறைத்து வைத்திருந்தார்.

தற்போதும் இக்குலை தொடாச்சியாக நீண்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்கள் இவ்வதிசயத்தை அறிந்து நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

தமிழர்கள் கனேடிய நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது

கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது. அவர்கள் மீதான விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களை அரவணைக்க கனடா முன்வர வேண்டும் என்று கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான டெரிக் லீ என்பவர் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியிருக்கின்றார்.
1940ம் ஆண்டில் முதலாவது தமிழர் கனடாவுக்கு வருகை தந்ததாகக் குறிப்பிடும் அவர், அன்று தொடக்கம இன்று வரை சுமார் சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கனடாவுக்கு வருகை தந்திருப்பதாகவும், அவர்கள் மூலமாக கனடாவின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், கனடாவின் பல் கலாசார சூழலுக்கு தமிழர்கள் வழங்கியுள்ள பங்களிப்பை இலகுவில் மறைத்து விட முடியாது என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலான உள்நாட்டு யுத்த வன்முறைகள் காரணமாக நொந்து போயிருக்கும் அந்த மக்களை இனியும் ஊடகங்கள் மற்றும் தேவையற்ற விமர்சனங்கள் மூலமாக நோகடிக்காது, அவர்களை நாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்கள் கனேடிய நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது

TamilWin.Com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

அசோகனின் துல காவடி கன்னிமார் விதியில் இருந்து கற்கரை பிள்ளையார் கோவில்

asokan


அசோகனின் துல காவடி கன்னிமார் விதியில் இருந்து கற்கரை பிள்ளையார் கோவில்

திங்கள், 26 ஜூலை, 2010


பச்சை பசேலென்ற காட்டுக்குள்
ஆடிப்பறக்க முடியாமல்
வேட்டைகாரன் கையில் அகப்பட்டு
வெட்டப்பட்ட சிறகுகளுடன்
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
கானக்குயில் நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?

ஓட்டுபவனின் உதை வாங்கி
விழுந்த அடி நொந்து
வீங்கிப்புண் ஆகி
வீணி ஒழுக
ஓட்டமாய் வண்டி இழுத்து செல்லும்
வண்டில் மாடு நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?

மானத்தின் முடி சூடி
வீரத்தின் வாள் ஏந்தி
காலத்தின் வதைவாங்கி
பாவத்தில் புதைக்கப்பட்ட
நடைபிணமாய் நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?

வெளிச்சத்தை கண்ட பரபரப்பில்
விளக்கின் மீது விழுந்த
விட்டில் பூச்சி நான்.
சுட்ட போதும்
சுதாகரித்து கொள்ள முடியாமல்
சுடுகாட்டில் சாம்பலாகிப்போகின்ற
நெஞ்சாங்கட்டை நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?

சோதனைகள் பல தாண்டியும்
சாதனைகள் படைக்க
துடித்த காலமெல்லாம்
வேதனையின் சுவாசத்தில்
உயிர் வாழும் பாவி நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?........

வெள்ளி, 4 ஜூன், 2010

மலர்களின் வேதனை

மலர்களின் வேதனை
வண்ண மலர்கொண்டு
உன் வதனம் சிலிர்த்திட
பாதடி நாடி தூவிய மலர்கள்
இதழ் இதழ்களாய்
நீ அடைந்த வழிகளில்

என் எண்ண ஓட்டத்தில்
கலந்த உன்னால்
நெஞ்சம் நிறைய
தந்த காதலில்
மங்கிய மதியால்
உன்னைச் சூடினேன்
மலராய்.......

மலர்களின் வேதனையால்
வெறுத்த எம் காதல்
மலரா மலர்களாய்
வாடியதும் தகுமோ....
மானே என்றேன்..
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.

கண்ணே என்றேன்..
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.

நீயின்றி நானில்லை என்றேன்..
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.

என் உலகமே நீதான் என்றேன்..
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை

அழகாய் இருக்கிறாய் என்றேன்..
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை

என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
.
(
.

பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....

இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை .

திங்கள், 26 ஏப்ரல், 2010


இளமைக் குரலை அறிந்துவிட்டேன்.
இன்பக் கடலில் மூழ்கிவிட்டேன்.
உன்னைக் கண்டா - குயிலும்
கூவப் பழகியது...!
உன்னைக் கண்டா - கிளியும்
பேசப் பழகியது...!
இளமை இனிமை இரண்டும்
என்னைத் தனிமை ஆக்கியது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!

அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன்.
உன்னை எண்ணி அன்னையை
அணைத்துவிட்டேன்.
உன்னைக் கண்டா - மயிலும்
ஆடப் பழகியது.
உன்னைக் கண்டா - அன்னம்
நடை பழகியது.
அழகும் அறிவும் இணைந்து
என்னை அமைதி ஆக்கியது.

தேவதையை நேரடிப் பார்வையில்
பார்த்து விட்டேன். - அவள்
காலடியில் தரிசனம் ஆகிவிட்டேன்.
உன்னைக் கண்டா - கோயில்ச்சிலைகள்
செதுக்கப் பழகியது.
உன்னைக் கண்டா - புடவைகள்
நெய்யப் பழகியது. - நீ.......
தேவதையா......? தெய்வச்சிலையா......?
என்னைச் சிந்தனையில் மூழ்கவைத்தது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

வீசியது கடும் புயற்காற்று....!


தமிழீழத்தில் ஓர் தென்றல்
திசை மாறி வீசியது.....
அது நீ பிறந்த போது...!
தமிழீழத்தில் மற்றுமோர் தென்றல்
திசை தெரிந்து வீசியது.....
அது நீ தவண்ட போது...!

தமிழீழத்தில் சில்லென
வீசியது காற்று.....
அது நீ படிக்கும் போது...!
தமிழீழத்தில் மெல்லப்
படந்தது பருவக்காற்று.....
அது நீ பருவமடைந்த போது...!

தமிழீழத்தில் ஆங்காங்கே
வருடியது வாடைக்காற்று.....
அது நீ சாதனை புரிந்த போது...!
தமிழீழத்தில் திசை தெரியாது
வீசியது கடும் புயற்காற்று.....
அது நீ செல்லடித்து சாகும் போது...!

புயற்காற்றே நீ.......... எப்போது
தென்றலாய் மாறுவாய்.............?
தென்றலே நீ............ எப்போது
எம் தேசத்தை தாளாட்டுவாய்....?
தேசமே நீ............. எப்போது
எம் தமிழினத்தை சீராட்டுவாய்...?
பாராட்டுவாய்....? தாளாட்டுவாய்...?

வியாழன், 22 ஏப்ரல், 2010

உன் அன்பு எனக்கு மட்டும்தான்.......


வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள் எல்லாம்
வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..
காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...

சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில் வாழ
வைக்க போராடுபவனே உன் அன்பினில்
என் தாயை காண்கிறேன்..
உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்..
என்னோடு சண்டை பிடிக்கும் போது உன்னை
குழந்தையாய் காண்கிறேன்..
இப்படி காணும்யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்
அனுபவிக்க விட நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல..

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நேற்று நிகழ்ந்தது.


“வந்து போனவன்

கட்டிச் சென்ற கோட்டையின் அருகாய்

பல்லாயிரம் பேர்கள் உயிரிழந்தார்கள்”

தயவு செய்து புள்ளி விபரங்களில்

உயிர்களை எண்ணாதீர்கள்.

அந்த இளைஞர்களின் சடலங்களை நீங்களெவரும்

கண்டதேயில்லை.

ஆறாய் ஓடிய குருதியைத் தானும்

அறிந்திருக்க மாட்டீர்கள்.

வெடிகளில் சிக்கி

அலறியபடியே இறந்த அவர்களிடம்

என்னதைப் போலவே கனவுகள் இருந்திருக்கும்.

முள்ளிவாய்க்கால்

காற்றுக்கு மட்டும் தெரிந்த அந்தக் கனவுகளை விவரிக்க

என்னிடமும் தான் வார்த்தைகள் இல்லை.

நாட்டை விட்டோடிய

லட்சம் பேரை விடவும் அவர்களிடமோ

நம்பிக்கை இருந்தது.

நாளைக்குச் சந்தியிலே சிலையெழுப்பி

அவர்களை “நினைவுகூர”

யாரும் முயலக்கூடும்.

வேண்டாம் பலவந்தமாக

அவர்களை யாரும் நினைவுறுத்த வேண்டாம்.

எனது தேசத்தின் மனிதர்கள்

என்று நான் அவர்களை

ஒவ்வோர் போதும் நினைவு கூர்வேன்

என்னைப் போலவே எனது தேச மக்களும்.

-இளவாலை விஜயேந்திரம்-