ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
My Movie
குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் கனடாக் கிளையினரால் குப்பிளான் ஒன்றுகூடல் நிகழ்வு படங்கள்
சனி, 16 ஜூலை, 2011
செம்மண் இரவு நிகழ்ச்சி
16-07-2011 சனிக்கிழமை கனேடிய நேரம் மாலை 4.30 மணியளவில் (தாயக நேரம் காலை 7.00) குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் கனடாக் கிளையினரால் நடாத்தப்படும் செம்மண் இரவு நிகழ்ச்சி நியூ குப்பிளான் இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.... கனடாவிலிருந்து நிகழ்ச்சித் தொகுப்பு - திரு. அசோகன்
http://newkuppilan.com/
http://newkuppilan.com/
புதன், 29 ஜூன், 2011
My Movie.wmv asok.wmv
உன்னைப் பார்த்த சில நொடியில்
என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா
மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட
ஏனோ என் கண்கள் துடிக்குதே
காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று
என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே
சனி, 21 மே, 2011
சனி, 26 மார்ச், 2011
சக்திதரன்

குப்பிளான் தெற்கு குப்பிளானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தன் சக்திதரன் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அதாவது இன்று மாலை அகால மரணமாகியுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் படித்து வெளியேறி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தற்சமயம் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
இவரது மரணத்தால் குப்பிளான் கிராமமே சோகத்தில் ...ஆழ்ந்துள்ளது. முழுமையான விபரங்கள் விரைவில்...See more
சனி, 12 மார்ச், 2011
சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் மார்ச் 19ல் பேரழிவுகள் ஏற்படும்? வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை

ஜப்பானை நேற்று மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும் தாக்கியுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எதிர்வரும் 19ஆம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம் பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்
தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வு உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து.
இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.
சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜோன் கெட்லி தெரிவித்துள்ளார்.
புதன், 2 மார்ச், 2011

இது என்ன விசித்திரமான தேசம்
கைக் குழந்தைகள் தவிர்த்து
ஆண் வாடையேதுமில்லை
எல்லோருமே பெண்கள்
வயதானவர்கள்
நடுத்தர வயதுடையோர்
யுவதிகள்
எல்லோருமே பெண்கள்
விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப
பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான
இவ் விசித்திர நகரில்
எஞ்சியுள்ள
எல்லோருமே விதவைகள்
எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்
சகோதரரைப் புத்திரர்களை
சீருடை அணிவித்து
வீரப் பெயர்கள் சூட்டி
மரியாதை வேட்டுக்களின் மத்தியில்
புதைத்திட்டோம்
திங்கள், 21 பிப்ரவரி, 2011
Incredible Performance by Tiny Tots, Spring Fest 2011, IIT Kharagpur
இந்த சிறுமிகளின் பிரமிக்க வைக்கும் சாகச யோக நடனம்
புதன், 16 பிப்ரவரி, 2011
http://newkuppilan.com/ குப்பிளான் கிராம இளைஞர் கட்டமைப்புக்கு பல்வேறு நாடுகளிலும் இருந்து உதவி செய்தவர்களின் விபரங்கள்...
உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் முதலில் நன்றிகள்..
குப்பிளான் கிராம இளைஞர் கட்டமைப்புக்கு பல்வேறு நாடுகளிலுமுள்ள இளையோர் உதவி செய்யவும் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொள்ளவும் முன்வந்துள்ளனர்.
தற்போது ஆரம்ப நிலையிலுள்ள குப்பிளான் விக்கினேஸ்வரா இளையோர் அபிவிருத்தி அமைப்புக்கு உதவி செய்தவர்கள் விபரங்கள் வருமாறு,
பெ. நிஷாந்தன் - 10, 000 ரூபாய் (சுவிஸ்)
லாவண்யா - 10,000 ரூபாய் (சுவிஸ்)
சி. காண்டீபன் - 10,000 ரூபாய் (பிரான்ஸ்)
ச. செந்தூரன் - 5000 ரூபாய் (பிரான்ஸ்)
க. ஐங்கரன் - 10,000 ரூபாய் (பிரான்ஸ்)
ச. அசோகன் - 10,000 ரூபாய் (கனடா)
த. கபில் - 5000 ரூபாய் (நோர்வே)
அருணகிரி அருணாச்சலம் - 15,000 ரூபாய் (சுவிஸ்)
தற்போது எம் கிராம இளைஞர்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்நிதியானது குப்பிளான் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் திருத்த வேலைகள், சிறார்களின் சீருடைகள் மற்றும் உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் செலவு விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும். விரைவில் இளைஞர் கட்டமைப்பின் முழு விபரங்களும் வெளியிடப்படும்.
குப்பிளான் கிராமத்துக்கு இந்த அமைப்பு ஒரு காத்திரமான பங்கை ஆற்றும்..
குப்பிளான் கிராம இளைஞர் கட்டமைப்புக்கு பல்வேறு நாடுகளிலுமுள்ள இளையோர் உதவி செய்யவும் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொள்ளவும் முன்வந்துள்ளனர்.
தற்போது ஆரம்ப நிலையிலுள்ள குப்பிளான் விக்கினேஸ்வரா இளையோர் அபிவிருத்தி அமைப்புக்கு உதவி செய்தவர்கள் விபரங்கள் வருமாறு,
பெ. நிஷாந்தன் - 10, 000 ரூபாய் (சுவிஸ்)
லாவண்யா - 10,000 ரூபாய் (சுவிஸ்)
சி. காண்டீபன் - 10,000 ரூபாய் (பிரான்ஸ்)
ச. செந்தூரன் - 5000 ரூபாய் (பிரான்ஸ்)
க. ஐங்கரன் - 10,000 ரூபாய் (பிரான்ஸ்)
ச. அசோகன் - 10,000 ரூபாய் (கனடா)
த. கபில் - 5000 ரூபாய் (நோர்வே)
அருணகிரி அருணாச்சலம் - 15,000 ரூபாய் (சுவிஸ்)
தற்போது எம் கிராம இளைஞர்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்நிதியானது குப்பிளான் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் திருத்த வேலைகள், சிறார்களின் சீருடைகள் மற்றும் உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் செலவு விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும். விரைவில் இளைஞர் கட்டமைப்பின் முழு விபரங்களும் வெளியிடப்படும்.
குப்பிளான் கிராமத்துக்கு இந்த அமைப்பு ஒரு காத்திரமான பங்கை ஆற்றும்..
எமது கிராம வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளிலுமுள்ள துடிப்புள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து வினைத்திறன் மிக்க இளைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான அறிவி
முடிவடைந்த போரின் பின்னர் எங்களுடைய கிராமம் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அங்கு பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன... நாடு அபிவிருத்தியடைந்து வரும் இந்த நேரத்தில் எமது கிராமத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் அங்குள்ள வறிய மக்களை வளப்படுத்தவும் செயல்திறன் மிக்க ஒரு இளைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று இன்று எழுந்துள்ளது....
இன்று எம் கிராமத்தில் உதாரணமாக குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் ஏராளமானோர் காலைச் சாப்பாடு கூட சாப்பிடாமல் தான் பாடசாலை வருகிறார்கள்... வன்னியிலிருந்து அகதிமுகாமூடாக விடுதலையாகி வந்த எம் கிராமத்தைச் சேர்ந்த பல உறவுகளும் அன்றாட செலவுக்கே அல்லாடுகிறார்கள்.... இப்படியாக பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளின் மத்தியில் எமது இன்று கிராமம் உள்ளது...
குப்பிளானில் உள்ள எம் கிராமத்தின் மீது அக்கறை கொண்ட வினைத்திறன் மிக்க துடிப்புடன் செயலாற்றக் கூடிய இளைஞர்கள் பலர் புலத்தில் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
இன்று எம் கிராமத்தில் உதாரணமாக குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் ஏராளமானோர் காலைச் சாப்பாடு கூட சாப்பிடாமல் தான் பாடசாலை வருகிறார்கள்... வன்னியிலிருந்து அகதிமுகாமூடாக விடுதலையாகி வந்த எம் கிராமத்தைச் சேர்ந்த பல உறவுகளும் அன்றாட செலவுக்கே அல்லாடுகிறார்கள்.... இப்படியாக பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளின் மத்தியில் எமது இன்று கிராமம் உள்ளது...
குப்பிளானில் உள்ள எம் கிராமத்தின் மீது அக்கறை கொண்ட வினைத்திறன் மிக்க துடிப்புடன் செயலாற்றக் கூடிய இளைஞர்கள் பலர் புலத்தில் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
என்னவளே...

எனக்காக பிறந்தவளே
என் உயிர் சுமப்பவளே
மாலையிட்ட நாளாய் என் கரம் பற்றியவளே
உன்னை பிரிந்தது இல்லை இன்று வரை
உன்னை முதல் முறை பார்த்தபோதே
நீ எனக்காக பிறந்தவள் என மனதில் ஒட்டிக்கொண்டாய்
முதல் பார்வை தொடங்கி இன்று வரை
உன் பார்வையில் காதல் உள்ளதடி
பிரியமானவளே உன் காதல் பார்வை
காணாமல் வாழ்க்கை வெறுமையாக உள்ளதடி!
தனிமையிலே இனிமை கண்டவன் நான்
உன் வருகைக்கு பின்பு தனிமையே பிடிக்கவில்லையடி
வேலைக்கு நான் சென்றாலும்
என் மனம் உன் பின்னால் சுற்றி வரும் வீட்டில்..
இத்தனை வருடங்கள் உன்னை காணாமல்
எப்படி தான் இருந்தேனோ!
என் வாழ்வில் வசந்தமாக வந்தவளே
என் உயிருக்குள் ஊடுருவி என் உயிர் சுமப்பவளே,
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் கசக்குதடி எனக்கு..
எங்கு திரும்பினாலும் உன் புன்னகை தான் தெரிகிறது,
என் தலையணை உன் வாசம் வீசுகிறது,
சீக்கிரம் வந்துவிடம்மா பிரசவம் முடிந்து
உன்னை காணாது நான் நானாகவே இல்லை
என் உயிர் தாரமே!
வியாழன், 10 பிப்ரவரி, 2011
வானம் என் வசமானால்
உன் பெயரில் பதிந்திடுவேன்
பூமி என் பொறுப்பென்றால்
உனக்காகத் தந்திடுவேன்
வெண்ணிலா எனதானால்
மாதமெல்லாம் உன்மடியில்
சூரியன் எனதானால்
வெப்பம்நீக்கி உனக்களிப்பேன்
கார்மேகம் எனதானால்
நீயுறங்க பஞ்சணையாம்
நட்சத்திரம் எனதானால்
எண்ணாமல் உனக்காக
குளிரிமயம் எனதென்றால்
சிகரமெல்லாம் உன் சொந்தம்
சுரங்கங்கள் எனதானால்
தங்கமெலாம் உன் கழுத்தில்
ஏழையென் கையிருப்போ
சின்னஞ்சிறு இதயந்தான்
அதுவும் உன் நினைப்பாலே
காற்றாகக் கரைந்ததினால்
என்வசம் ஏதுமின்றி
வெறுமையாய் நிற்கின்றேன்
உன் வசம் எனைக்கொடுக்க
சித்தமாய்க் கிடக்கின்றேன்
உன் பெயரில் பதிந்திடுவேன்
பூமி என் பொறுப்பென்றால்
உனக்காகத் தந்திடுவேன்
வெண்ணிலா எனதானால்
மாதமெல்லாம் உன்மடியில்
சூரியன் எனதானால்
வெப்பம்நீக்கி உனக்களிப்பேன்
கார்மேகம் எனதானால்
நீயுறங்க பஞ்சணையாம்
நட்சத்திரம் எனதானால்
எண்ணாமல் உனக்காக
குளிரிமயம் எனதென்றால்
சிகரமெல்லாம் உன் சொந்தம்
சுரங்கங்கள் எனதானால்
தங்கமெலாம் உன் கழுத்தில்
ஏழையென் கையிருப்போ
சின்னஞ்சிறு இதயந்தான்
அதுவும் உன் நினைப்பாலே
காற்றாகக் கரைந்ததினால்
என்வசம் ஏதுமின்றி
வெறுமையாய் நிற்கின்றேன்
உன் வசம் எனைக்கொடுக்க
சித்தமாய்க் கிடக்கின்றேன்
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
Amazing talking Mynah :conversation 1 with "Kaleo"
கிளிகளுக்கு பேசும் தன்மை உண்டு.சொல்லிக் கொடுக்கின்றவற்றைப் பேசக் கூடியன.ஆனால் மைனாக்களால் பேச முடியுமா?
தாய்வான் நாட்டில் வீடு ஒன்றில் வளர்க்கப்படும் மைனா ஒன்று பேசுகின்றது.
சொல்லிக் கொடுக்கின்றவற்றை அப்படியே ஒப்புவிக்கின்றது.
அத்துடன் சொல்லிக் கொடுப்பவற்றை விளங்கியும் கொள்கின்றது.
இதனால் இது ஒரு அதிசயமான மைனா என்று வர்ணிக்கப்படுகின்றது.
வீடியோவை பாருங்கள்.
சனி, 1 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)