பச்சை பசேலென்ற காட்டுக்குள்
ஆடிப்பறக்க முடியாமல்
வேட்டைகாரன் கையில் அகப்பட்டு
வெட்டப்பட்ட சிறகுகளுடன்
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
கானக்குயில் நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?
ஓட்டுபவனின் உதை வாங்கி
விழுந்த அடி நொந்து
வீங்கிப்புண் ஆகி
வீணி ஒழுக
ஓட்டமாய் வண்டி இழுத்து செல்லும்
வண்டில் மாடு நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?
மானத்தின் முடி சூடி
வீரத்தின் வாள் ஏந்தி
காலத்தின் வதைவாங்கி
பாவத்தில் புதைக்கப்பட்ட
நடைபிணமாய் நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?
வெளிச்சத்தை கண்ட பரபரப்பில்
விளக்கின் மீது விழுந்த
விட்டில் பூச்சி நான்.
சுட்ட போதும்
சுதாகரித்து கொள்ள முடியாமல்
சுடுகாட்டில் சாம்பலாகிப்போகின்ற
நெஞ்சாங்கட்டை நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?
சோதனைகள் பல தாண்டியும்
சாதனைகள் படைக்க
துடித்த காலமெல்லாம்
வேதனையின் சுவாசத்தில்
உயிர் வாழும் பாவி நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்?
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்?
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்?
எனக்காய் யாறிருக்கிறார்?........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக